search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுதி மந்திரி"

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இன்று சீனா வெளியுறத்துறை மந்திரியும், சவுதி அரேபியா நாட்டு கலாசாரத்துறை மந்திரியும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். #Saudiminister #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பல்வேறு நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் இன்று சவுதி அரேபியா நாட்டு தகவல் தொடர்பு மற்றும் கலாசாரத்துறை மந்திரி அவ்வாட் பின் சாலே அல்-அவ்வாட் இன்று இம்ரான் கானை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சவுதி அரேபியா தொடர்ந்து ஆதரிக்கும் என அந்நாட்டு மன்னர் முஹம்மது பின் சல்மான் உறுதியளித்துள்ளதாக இம்ரான் கானிடம் தெரிவித்த  அவ்வாட் பின் சாலே, சவுதி அரேபியாவுக்கு வருமாறு மன்னர் அனுப்பிய அழைப்பையும் அளித்தார்.

    பின்னர், பாகிஸ்தானில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீனா வெளியுறத்துறை மந்திரி வாங் இ இம்ரான் கானை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த சந்திப்புகளின்போது பாகிஸ்தான் வெளியுறத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி பவாட் சவுத்ரி ஆகியோரும் உடனிருந்தனர். #Saudiminister #ImranKhan
    ×